Sunday 4 March 2012

ஃபோட்டோஷாப்' மென்பொருளுக்கு மாற்று கிம்ப்

, by Kuhandoss

GIMP :
கிம்ப் (GIMP அல்லது GNU IMAGE MANIPULATION PROGRAM) என்பது 'அடோப் ஃபோட்டோஷாப்' மென்பொருளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஒரு பொது நிரலாக்க மென்பொருள் ஆகும். ஆனால் இது ஃபோட்டோஷாப்பின் நகல் இல்லை. இது பல்வேறு இயக்கத்தளங்களில் அதாவது லினக்ஸ், விண்டோஸ் மற்றும் மேக் போன்றவற்றில் இலவசமாக நிறுவிப் பயன்படுத்தலாம்.

இதன் சிறப்பம்சங்கள்:
CUSTOMIZABLE INTERFACE
உங்களுக்கு ஏற்றவாறு காட்சியமைப்புகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம்
PHOTO ENHANCEMENT
உங்கள் புகைப்படங்களை மேலும் மேம்படுத்திக்கொள்ளலாம்
DIGITAL RETOUCHING
உங்கள் புகைப்படங்களை மெருகேற்றிக்கொள்ளலாம்
HARDWARE SUPPORT
அனைத்து வன்பொருள்களுக்கும் ஒத்திசையகூடியது.
SUPPORTED FILEFORMATS:
 
SUPPORTED PLATFORMS:GNU/LINUX (I386, PPC)
MICROSOFT WINDOWS (XP, VISTA)
MAC OS X
SUN OPENSOLARIS
FREEBSD

கிம்ப் மென்பொருளை எடுத்து கொண்டால் அதில் பல வசதிகள் மற்றும் கருவிகள் உள்ளன. கிம்ப்பில் உள்ள கருவிகள் கருவிப்பட்டைகள், மெனு மற்றும் உரையாடல் பெட்டிகள் மூலம் கையாளப்படுகிறது. அதில் ஃபில்டர்கள், ப்ரஷ்கள், தேர்ந்தெடுத்தல், லேயர், மாஸ்கிங் கருவி, வெட்டும் கருவி என பல கருவிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக பார்த்தால் கிம்ப்பில் 48 ப்ரஷ்கள் உள்ளன. அதே போல நமக்கு வேண்டிய அளவில் நாமே ப்ரஷை உருவாக்கியும் கொள்ளலாம். அந்த ப்ரஷே கடின ஓரமாகவும், மென்மையான ஓரமாகவும், அழிக்கக்கூடியதாகவும், வெவ்வேறு ஒளி அளவிலும் என பல்வேறு முறைகளில் பயன்படுத்தலாம்.
பதிவிறக்கம் செய்ய: CLICK HERE
நன்றி: WIKIPEDIA

0 comments:

Post a Comment