Sunday 11 March 2012

சானல் 4 வெளியிட்ட போர்குற்ற ஆவணப்படம்

, by Kuhandoss

நம் தமிழக மக்கள் பெரும்பாலானவர்களுக்கு இலங்கையில் போர் நடந்தது என்பது தெரியும், பலரை சுட்டு கொன்று விட்டனர் என்பதும் தெரியும் ஆனால் அங்கே நடந்துள்ள, மறைக்கப்பட்டுள்ள கொடூரங்கள், மனித உரிமை மீறல்கள், வன்கொடுமைகள் போன்றவை பல மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனை பற்றி நமது ஊடகங்களும் மக்களுக்கு தெரியா வண்ணம் மறைத்துவிட்டன அவ்வாறு தெரியப்படுத்தினாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களை சென்றடையும் வண்ணம் செய்திகளை வெளியிடவில்லை.



இருப்பினும் சில ஊடகங்கள் விளம்பரத்திற்கும், அரசியல் ஆதாயதிற்கும் சில கானோளிகளையும், படங்களையும் வெளியிட்டன. ஆனால் சானல்4 என்னும் தொலைக்காட்சி அதனை பற்றிய குறும்படத்தை வெளியிட்டு இலங்கையில் அரேங்கேரிய படும்பாதக செயல்களை உலகறிய செய்தது. பலநாடுகள் அந்நாட்டில் நடந்த வக்கிரங்களுக்கு எதிராக கூக்குரலிட தொடங்கிவிட்டன. ஆனால் முக்கிய அங்கமாக பாதிக்கபட்டிருக்கும் நம் இனத்தை நாமே கண்டுக்கொள்ளாமல் இருப்பது, நாம் அவர்களுக்கு இழைக்கும் துரோகம் ஆகும். ஐ.நா வரை சென்றும் நிலைமை புரியாமல் நாம் அமைதி காப்பது என்பது முறையான வழிமுறையாக தெரியவில்லை.



இக்குறும்படத்தில் சுட்டிக்காட்டப்படும் விடயங்கள், சம்பவங்கள், சிங்களர்கள் இறந்த தமிழர், தமிழச்சிகளை பார்த்து அவர்களுக்கு எதிராக அவர்கள் உச்சரிக்கும் சொல்லன்னா வார்த்தைகள், அவர்களால் நம் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாகும் காட்சிகள் போன்றவை பார்ப்பவர்களின் மனதிலும், அடி வயிற்றிலும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்துகிறது. இன்னும் பல புகைப்படங்கள், காணொளிகள் பல வலைதளங்களில் காணக் கிடைக்கின்றன, அவற்றை காண மனவலிமை நிச்சயம் தேவை. ITS ABOUT EXECUTION OF TAMILS என்று இக்குறும்படம் மிகத்தெளிவாக விவரிக்கிறது.

படத்தின் இறுதிக்காட்சிகளில் சிறை பிடிக்கப்பட்ட புலிகள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றது. கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக உட்கார வைத்து அரட்டை அடித்தவாறே சுட்டுக் கொல்கிறார்கள். பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். காலால் பெண்ணுறுப்புகளை எட்டி உதைக்கிறார்கள். நிர்வாணமான பெண்ணுடல்களை நிர்வாணமாக நாதியற்ற நிலையில் டிரக்கில் ஏற்றும் போது “இதுதான் நல்ல ஃபிகர்” என்று கூறி மகிழ்கிறார்கள். இலங்கையின் அரங்கேற்றப்பட்ட அவலம் நாம் நினைத்ததை விட மிகவும் மோசமானதாக இருக்குமென்பது மட்டும் உறுதி. இப்படத்தினை பார்க்கும் பொழுது உங்களுக்கு நிச்சயம் புரியும்.

இந்த ஆவணப்படம் வெளியாவது குறித்து பெரும் பணத்தை செலவு செய்து பிரிட்டன் நாளிதழ்களில் விளம்பரமாகத் தந்தது சேனல் 4 என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 70 ஆயிரம் தமிழர் குறுகிய காலகட்டத்தில் கொல்லப்பட்ட ஒரு கொடிய நிகழ்வை முழுதாக மறந்து அல்லது மறைத்து எப்படி இந்த உலகத்தால் இயங்க முடிகிறது?

"KILL EVERYBODY AND FINISH THE WAR" அனைவரையும் கொன்றொழித்துவிடுங்கள் போரினை முடியுங்கள் என்ற ரீதியில் முடிக்கப்பட்டுள்ள இப்போரானது. LTTE க்கு எதிராக நடைபெற்ற போர் என்ற பெயரில் அங்கு வாழும் தமிழக மக்களுக்கு எதிராகவும் அரங்கேற்றப்பற்ற ஒரு இனவழிப்பு போராகவே இது கருதப்படுகிறது. இன்றும் அங்கு நம் தமிழன் தமிழச்சிகள் சந்தேகம் என்ற பெயரில் கைது செய்து பல பாலியல் வல்லூருக்கு ஆளாக்கி கொன்றும் வருகின்றனர்.

உதாரணத்திற்கு இக்குறும்படத்தில் வரும் ஒரு காட்சி அதை ஒரு பெண்ணே வேறு வார்த்தைகளில் கூறுகிறார். பிணங்களையே வதைக்கக்கூடிய அந்த மிருகங்கள் உயிருடன் இருப்போரை என்ன செய்திருக்குமென்பது புரியாத விடயமல்ல என்பதுதான் அது.

இதனை நான் பதிவாக போடுவதற்கு காரணம், இன்று நம் இனத்திற்காக போராடாத நாம், நாளை நாமும் பாதிக்கப்படும் பொழுது கேட்க நாதியற்ற ஓர் இனமாய் இருப்போமா என்றே எண்ணத் தோன்றுகிறது.

உதாரணம்:

➤ மீனவர்கள் இலங்கையினரால் சுட்டுக்கொலை செய்யப்படுவது.

➤ கேரளத்தில் தமிழர்க்கு எதிராக நடைபெற்ற அணை பிரச்சனையில் உச்சநீதிமன்றம் கூறியும் கேரளாவினர் தமிழர்களையும், தமிழச்சிகளையும் மானபங்கப்படுத்தி அடித்து விரட்டியது.

➤ தமிழகத்தில் கூடங்குளம் ஆபத்து எனத் தெரிந்தும் தமிழகத்தில் திணிப்பது (நாளை பாதகம் ஏதேனும் ஏற்பட்டால் (போபால் நிலையே ஏற்படும் என்பது உறுதி (இன்றும் போபாலில் பலர் ஊனமாகவும், உடலுறுப்பு இன்றியும் பிறக்கின்றனர், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடாக 2300 ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது),

➤ மின்சாரத் தேவையில் மத்திய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளாதது.

இவையனைத்தும் நம் இனத்திற்கு சுற்றப்படும் ஒரு வலையாகும். நாளை நாம் என்னதான் கதறினாலும் யாரும் கண்டுகொள்ளாத நிலை வரும் ஏன் உலகமே செவிமடுக்காது இருக்கலாம் இது வெறும் வியூகம் தான் ஒருவேளை வரும்நிலை ஏற்பட்டால்.

ஒரே ஒரு முறை நம்மை இவ்வுலகில் நாம் யாரென நிருபித்துவிடவேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறோம். அல்லது நாளை கேட்பாரற்ற, கேட்க நாதியற்ற நிலையில் நாம் இருக்க மாட்டோம் நம் சந்ததியினர் இருப்பர். நம் பக்கத்து நாட்டில் நமக்கெதிராக நடைபெற்ற இவ்வக்கிரமங்களை அறிந்துகொள்ளாமல், கண்டுக்கொள்ளாமல் இருப்பது நமது அறியாமையை பறைசாற்றுகிறது. இக்கொடுமைக்கு ஆக்கபூர்வமாக ஒரு முடிவெடுப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

0 comments:

Post a Comment