Tuesday 1 May 2012

மைக்ரோசாப்ட் NOTEPAD ஐ டைரியாக உபயோகிக்க

, by Kuhandoss

மைக்ரோசாப்ட் NOTEPADஐ வைத்து நாம் பல விளையாட்டுகளை நம் கணினியில் விளையாடலாம் அவற்றில் மிகவும் சுவாரசியமானது NOTEPADஐ டைரியாக உபயோகிப்பது மற்றொன்று MATRIX EFFECTS போன்று MS DOS இல் கொண்டுவருவது இவற்றை பற்றி கீழே விரிவாய் பார்ப்போம்.



01. NOTEPAD ஐ டைரியாக உபயோகப்படுத்துவது.
முதலில் START MENU விற்கு சென்று NOTEPAD ஐ திறந்துக்கொள்ளுங்கள்
பின்னர் அதில்:
.LOG என டைப் செய்யவும்
பின்னர் ENTER பட்டனை ஒருமுறை அழுத்தவும். இறுதியாக உங்களுக்கு விருப்பமான பெயரில் SAVE செய்துக்கொள்ளவும். இப்போது நீங்கள் SAVE செய்த NOTEPAD பைலை திறந்து பார்த்தால் அதில் தன்னிச்சையாக நேரம் தேதி போன்றவை காணப்படும். இவ்வாறு நீங்கள் NOTEPAD ஐ திறக்கும் பொழுதெல்லாம் தொடர்ந்து நடைபெறும் என்பதால் இதனை நீங்கள் டைரியாக உபயோகிக்கலாம் அல்லது TIMESHEET ஆகவும் உங்கள் அலுவலகங்களில் பயன்படுத்தலாம்.

02. MATRIX EFFECTS
உங்கள் NOTEPADஐ OPEN செய்துக்கொள்ளுங்கள் இப்பொழுது கீழ் வருவனவற்றை COPY செய்து உங்கள் NOTEPADஇல் PASTE செய்யுங்கள்:

@ECHO OFF
COLOR 02
:START
ECHO %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM% %RANDOM%
GOTO START

PASTE பின்னர் MATRIX.BAT என SAVE செய்யுங்கள். இப்பொழுது நீங்கள் SAVE செய்த NOTEPAD பைலை திறந்து பார்த்தீர்களானால் MATRIX EFFECTS போன்று MS-DOS இல் தென்படும்.

1 comment: