Wednesday 11 April 2012

நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதுகாப்புக் குறிப்புக்கள்

, by Kuhandoss

நிலநடுக்கம் என தெரிந்தவுடன் நீங்களும் பயப்படாதீர்கள் மற்றவர்களையும் பயத்தில் ஆழ்த்தாதீர்கள் மாறாக உடனே திட்டமிட ஆரம்பியுங்கள்.

01. வீட்டில் உள்ள கேஸ் மற்றும் தண்ணீர் ஊற்றுகளை அடைத்துவிடுங்கள்.
02. முதலில் உயிர்வாழ தேவையான பொருள்களை சேகரியுங்கள்.


குறிப்பாக நீங்கள் சேகரிக்க வேண்டியது:
01. பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
02. முதலுதவி பெட்டி அல்லது கிட்,
03. நபருக்கு மூன்று தண்ணீர் கேலன்கள் (11.4 லிட்டர்)
04. தூசியில் இருந்து உங்களை காக்க முகமூடிகள் மற்றும் கண்ணாடிகள்.
05. பேட்டரியால் இயங்கும் வானொலி மற்றும் ஒளிரும் விளக்குகள்.
06. பாதுகாப்பிற்கு புதிய அல்லது சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரிகள்.
07. முக்கியமான ஆவணங்கள், கோப்புகள், சான்றிதழ்கள், பத்திரங்கள் போன்றவற்றை பாதுகாப்பாக உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள் அல்லது நீங்கள் எது பாதுகாப்பான வழிமுறை எனக் கருதுகிறீர்களோ அந்த வழிமுறையையும் பின்பற்றுங்கள்.

03. ஒருவேளை நெரிசலில் உறவுகளை பிரியும் நிலை ஏற்படாலாம்.  ஆகையால் முன்பே திட்டமிட்டு நீங்கள் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பான இடத்தில் அனைவரும் வந்து சேர்வதைப்போல தயார்படுத்திக்கொள்ளுங்கள்.

04. நீங்கள் இரவில் படுக்கையில் இருக்கும்பொழுது பூகம்பம் ஏற்பட்டால், வெளியில் ஓடி வந்துவிடுங்கள் முடியாதப் பட்சத்தில் உடனே உங்கள் வீட்டில் உள்ள கட்டிலுக்கு அடியிலோ அல்லது மேஜையின் அடியிலோ சென்று ஒளிந்துக்கொளுங்கள் மேலும் பாதுகாப்பிற்கு தலையணையை வைத்து உங்கள் தலையை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

05. மாடி வீட்டில் இருந்தால் லிப்ட் உபயோகப்படுத்தாதீர்கள்.

06. மரச்சாமான்கள், அலமாரிகள் கண்ணாடிகள் போன்ற எளிதில் சாயும் பொருட்களிடமிருந்து இருந்து விலகியே இருங்கள்.

07. நீங்கள் வெளியில் நடந்துக்கொண்டோ, காரிலோ அல்லது பைக்கிலோ பயணம் செய்துக்கொண்டிருந்தால் உடனே கட்டிடங்கள், மின் இணைப்புகள், மரங்கள்  இல்லாத பாதுகாப்பான  இடத்திற்கு நிதானமாக சென்றுவிடுங்கள் மேலும் நீங்கள் செல்லும் இடத்தை உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துவிடுங்கள் அவர்களையும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள். (உங்கள் அருகாமையில் இவ்வாறான இடங்கள் இருந்தால்அவ்விடம் நோக்கி நகர்த்தல் நலம்).

08. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோளில் 8.0 + தாண்டிவிட்டாலே சுனாமியை பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிடுங்கள் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ எச்சரிக்கைக்காக காத்திருக்காதீர்கள்.

09. அலுவலகம், பள்ளி, கல்லூரி, ஹோட்டல் என எங்கு இருந்தாலும் சரி அல்லது முக்கியமான வேலையாக இருந்தாலும் சரி முதலில் வெளியேறிவிடுங்கள்.

10. கடலில் இருந்து குறைந்தபட்சம் 30 கிலோமீட்டராவது தள்ளி இருங்கள்.
அல்லது அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உயரமான இடத்தை நோக்கி நகருங்கள் குறிப்பாக
01.உயந்த மலைகள்,
02. உயர்ந்த மேடுகள்,
03. உயர்ந்த கம்பீரமான, உறுதியான கட்டிடத்தின் மேல் தளத்திற்கு சென்றுவிடுங்கள்.
04. நன்றாக வேரூன்றிய, திடமான ஒரு மரத்தில் ஏறி அதனை நன்றாகப் பற்றிக்கொள்ளுங்கள்.

11. முதலில் நன்றாக நீந்தப் பலகிக்கொள்ளுங்கள்.

குறிப்பு: 
01. முடிந்தவரை நீங்கள் அறிந்தும், அறியாமல் செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மனமுருக மன்னிப்பு கேளுங்கள்.
02. கூட்டத்தோடு இருந்தால் கூட்டு வழிபாடு நடத்துங்கள், அது தேவையில்லாத அச்சத்தை போக்கும், மேலும் இறை நம்பிக்கையானது நம்மை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நம்மை நிச்சயம் பாதுகாக்கும்.
03. இயற்கை அன்னையிடமும், கடல் அன்னையிடமும், பஞ்ச பூதங்களிடமும், பூமித் தாயிடமும் தங்களை மன்னித்து காத்தருளும்படி வேண்டிக்கொள்ளுங்கள்.
04. ஆபத்தில் இருப்பவர்களை முடிந்தமட்டும் காப்பாற்றுங்கள்.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நேஷனல் ஜியோகிராபிக் சானல் உள்ளிட்ட பல தலைச்சிறந்த வலைதளங்களில் இருந்து திரட்டப்பட்டது.

0 comments:

Post a Comment