Monday 5 March 2012

ஒப்பன் ஆபிஸ் மென்பொருள் ஒரு பார்வை

, by Kuhandoss

ஓப்பன் ஆபிஸ் அல்லது திறந்த அலுவலகம் ஒரு அலுவலக பணிகளை செய்யும் அனைத்து மென்பொருளையும் கொண்ட ஒரு தொகுப்பு ஆகும். இதில் செயற்செயலி (வேர்ட் பிராஸஸர்), விரிதாள் (ஸ்பெரட் ஷீட்), தரவுத்தளம் (டேட்டாபேஸ்), காட்சி (பிரசென்டேஷன்) என ஒரு தொகுப்பாக வருகிறது. இந்த ஓப்பன் ஆபிஸின் இன்னொரு சிறப்பு லினக்ஸ், விண்டோஸ் என பல இயக்கத்தளங்களில் நிறுவி பயன்படுத்தி கொள்ளலாம். இது மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் கொண்டுள்ள கோப்பு வடிவங்களையும் கொண்டிருப்பதால், எளிதாக கோப்புகளிடையே பணியாற்றி கொள்ளலாம்.


ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் பல இயக்கத்தளங்களில் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயக்கத்தளத்திற்கும் ஏற்றவாறு இது உருவாக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ், லினக்ஸ், மேக் மற்றும் சோலாரிஸ் இயக்கத்தளங்களில் இயங்குவது இதன் சிறப்பாகும். மேலும் இது ஓப்பன் டாக்குமென்ட் தரப்படுத்தப்பட்ட கோப்பு முறைமைகளையும் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 97-2003 கோப்பு வடிவங்களுக்கும் துணைபுரிவது இதன் மற்றொரு சிறப்பாகும். மேலும் இது மைக்ரோசாப்ட் ஆபிஸ் பயன்படுத்தும் பெரும்பாலான கோப்பு வடிவங்களை வாசிக்கவும், திருத்தவும் செய்கிறது. இதில் இன்னொரு விஷயம் மைக்ரோசாப்ட் ஆபிஸின் பழைய பதிப்பு கோப்புகளையும், பழுதடைந்த கோப்புகளையும் இது திறக்கிறது. ஆனால் மைக்ரோசாப்ட் ஆபிஸ் இதனை செய்ய தவறுகிறது என்பதே இதில் வேடிக்கையாகும்.
 
பதிவிறக்கம் செய்ய: CLICK HERE
நன்றி: WIKIPEDIA

0 comments:

Post a Comment